ஊரக வளர்ச்சித் துறையில் டெண்டர் முறைகேடு! பெண் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
20 May 2026, 11:13 pm
<p><strong>ஊரக வளர்ச்சித் துறையில் டெண்டர் முறைகேடு! பெண் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்</strong></p><p>காஞ்சிபுரம், மே 20 - கோனேரிக்குப்பம் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி டெண்டர் முறைகேடு தொடர்பாக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 15-ஆவது மானியக் குழுவின் நிதித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிகுப்பம் அருகே உள்ள காரைப்பேட்டை கிராமத்தில் ரூ. 16.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்தது. ஒப்பந்த விதிமுறைகளின்படி, டெண்டர் ஆவணங்கள் மே 12 முதல் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டிருக்க வேண் டும். ஆனால், விதிமுறைகளை மீறி, மே 18 ஆம் தேதியன்று டெண்டர் உருவாக்கப்பட்டு, மே 19 இணைய தளத்தில் வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது. அதுமட்டுமன்றி, காலை 9 மணிக்கு கோரப்பட்டு, அதே நாள் மாலை 3 மணிக்கே மூடப்பட்ட தாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலை யில், டெண்டர் ரத்து செய்யப் பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள் மீறப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தமிழ்நாடு அரசு பணியாளர் ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு விதிகள் 17e-ன் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் சினேகா உத்தரவின் பேரில், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சாந்தி, காஞ்சி புரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் எல். கயல்விழி ஆகிய 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p>
