தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருதம் சிப்காட் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் தவிச காஞ்சிபுரம் மாநாட்டில் தீர்மானம்

18 Aug 2026, 1:37 am
மருதம் சிப்காட் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் தவிச காஞ்சிபுரம் மாநாட்டில் தீர்மானம்

மருதம் சிப்காட் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் தவிச காஞ்சிபுரம் மாநாட்டில் தீர்மானம்

காஞ்சிபுரம், ஆக.17-குறைந்த வாடகையில் அரசு சார்பில்அறுவடை இயந்திரங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட31ஆவது மாநாடு தோழர் என்.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.

தவிச மாநிலத் துணைச் செயலாளர்என்.துளசிநாதன் தொடக்க உரையாற்றினார். சங்க நிர்வாகி எஸ்.பழனிவரவேற்புரையாற்றினார். ஜி.படவேட்டான் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

மாவட்டச் செயலாளர் என்.சாரங்கன்வேலை அறிக்கையையும், கே.செல்வம் வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலத் துணைச் செயலாளர் கே.நேரு வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலத் துணைத் தலைவரும் பி.டில்லிபாபு மாநாட்டின் நிறைவுஉரையாற்றினார்.

நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக என்.சாரங்கன், செயலாளராக என்.நந்தகோபால், பொருளாளராகசெல்வம் உள்ளிட்ட 22பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தீர்மானம்

விவசாயப் பயிர்களுக்கு லாபகரமான ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயத்திற்கான அனைத்து பொருட்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும். 60 வயது கடந்த அனைத்துவிவசாயிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். செய்யாறு ஆற்றில்10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகட்ட வேண்டும் மற்றும் பாரம்பரியவிவசாயத்தைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.