தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கமுதியில் தடையின்றி குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

12 Jun 2026, 9:41 pm
கமுதியில்  தடையின்றி குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
<p><strong>கமுதியில் தடையின்றி குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு</strong></p><p>இராமநாதபுரம்,ஜூன் 12- இராமநாதபுரம் மாவட் டம் கமுதி பேரூராட்சியில் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் 13-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து கோரிக் கைகள் குறித்து கேட்ட றிந்ததுடன், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றிடும் வகையில், இப் பகுதியில் புதிதாக சுகாதார வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்கு வதை பேரூராட்சியின் நிர்வாகம் கண்காணித்திட வேண்டும் என அலுவலர்க ளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். பின்னர் கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று உலக குழந்தை தொ ழிலாளர் எதிர்ப்பு தினத்தை யொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரி யர்களுடன் குழந்தை தொ ழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பு வரை படித்து அரசு பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியதுடன், மாணவ, மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாரா யணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.