கம்மாபுரத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு
9 Jul 2026, 11:26 pm
<p><strong>கம்மாபுரத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு</strong></p><p>கடலூர், ஜூலை 9 – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்தும், திட்டத்தின் பெயரை மீண்டும் பழைய நிலையிலேயே தொடர வலியுறுத்தியும், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர்.சந்தன மேரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி நாட்களை 200 நாட்க ளாக உயர்த்த வேண்டும் மற்றும் தின சரி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, மாதர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் அளித்தனர். இதில் மாவட்டத் தலை வர் பி.மாதவி, கே.அன்புச்செல்வி, பி.முத்து லட்சுமி, ஆர்.ரேவதி, ஜி.முத்துலட்சுமி, கே.கவிதா, ஆர்.சிவகாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p>
