முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை
yesterday
<p>முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட செருப்பாலூர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி எழுது பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம் மற்றும் உயர்ந்த இலக்குகளுடன் கல்வி பயில வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.</p>
