தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்

17 May 2026, 8:59 pm
புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்

புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்

மதுரையில் கமல்ஹாசன் பேட்டி மதுரை, மே 18- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை வர் கமல்ஹாசன் ஞாயிறன்று சென்னை யில் இருந்து மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களி டம் கூறியதாவது: மதுரைக்கு சேயோன் பட தொடக்க விழாவுக்காக வந்திருக்கிறேன்.

எப்போது மதுரைக்கு வந்தாலும் மதுரை மக்களின் அன்பு குறையாமல் இருக்கும்.

இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

2, 6 நாட்களில் ஜோசியம் தான் சொல்ல முடியும். ஒரு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். புதியவர்கள் வந்தி ருக்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். புதிய வர்கள் என்பவர்கள் அரசியலுக்கு புதிது என்பது கிடையாது.

சுதந்திர இந்தியா வந்தபோது அனைவரும் புதியவர்கள் தான். புதியவர்களை குறைத்தும் மதிப்பிட முடியாது.

அவர்களிடம் அதிகமாகவும் எதிர்பார்க்கக் கூடாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும்.

மக்கள் தான் வாக்களித்து ஆட்சி கட்டி லில் அமர வைத்திருக்கிறார்கள். மக்களும் கண்காணிக்க வேண்டும், நாங்களும் கண்காணிப்போம்.

என்னை பொறுத்த வரையில் தமிழகத்தில் இருந்து தமிழ் பேசும் ஒருவர் கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சி தான்.

மும்மொழிக் கொள்கை விவகா ரத்தில் தமிழகத்தை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.

நடிகர் ரஜினிகாந்த், விஜய் வெற்றி பெற்றது ஆச்சரியம் கலந்த சந்தோஷம் எனக் கூறியிருக்கிறார். மேலும் கமல் ஹாசன் முதலமைச்சர் ஆகி இருந்தால் கூட பொறாமைப் பட்டிருப்பேனோ என்னவோ என அவர் சிரித்துக் கொண்டே கூறினார்

நாங்கள் இருவரும் போட்டி போடுவோம்.

ஆனால் பொறாமைப்பட்டது கிடையாது.

நாங்கள் சினிமா துறையில் இருக்கிறோம், கிரிக்கெட் விளையாடியிருந்தாலும் இப்ப டித்தான் போட்டி போட்டு இருப்போம்.

முத லமைச்சர் விஜய், எடப்பாடியை சந்திக்கா மல் இருப்பது பற்றி மக்கள் எவ்வாறு வேடிக்கை பார்க்கிறார்களோ அவ்வாறு தான் நானும் வேடிக்கை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.