தீக்கதிர் முக்கிய செய்திகள்
12 Apr 2026, 5:30 am

ஏப். 17 முதல் கமலஹாசன் தேர்தல் பரப்புரை

ஏப். 17 முதல் கமலஹாசன் தேர்தல் பரப்புரை சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து ஏப்ரல் 17 முதல் 21-ஆம் தேதி வரை 26 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற் கொள்ள உள்ளார். தேர் தல் நாள் நெருங்கும் தருணத்தில் கூட்டணி யின் வாக்கு சேகரிப்பு முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகை யில் இந்த பிரச்சாரம் அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் சென்னை: கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழக கிழக்குக் கடற்கரை நெடுகி லும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதிகள் முழுவதும் இந்த தடை நடைமுறைக்கு வரும். ஏற்கனவே மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ள அனைத்து மீனவர்களும் ஏப்.14 ஆம் தேதி நள்ளிர வுக்குள் கரை திரும்பி விட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்காலக் கட்டத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதால் இந்த தடைக் காலம் கடைப்பி டிக்கப்படு கிறது. விதிகளை மீறுப வர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் சென்னை: தமிழகத் தில் கோடை வெயில் தனது உக்கிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஏப்.12 ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப் புள்ளது. ஏப்.10 முதல் 14 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக மாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.