ஏப். 17 முதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை
12 Apr 2026, 5:30 am

ஏப். 17 முதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 17 முதல் 21-ஆம் தேதி வரை 20 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தேர்தல் ஆணையத்திடம் இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியின் வாக்கு சேகரிப்பு முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம். சென்னை: கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதிகள் முழுவதும் இந்தத் தடை நடைமுறைக்கு வரும். 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும். சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்.12 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்.13 மற்றும் 14 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்.10 முதல் 14 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.