தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வராயன்மலையில் பாதியில் நின்ற அங்கன்வாடி மையக் கட்டிடம் விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

17 Jun 2026, 12:06 am
கல்வராயன்மலையில் பாதியில் நின்ற அங்கன்வாடி மையக் கட்டிடம் விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
<p><strong>கல்வராயன்மலையில் பாதியில் நின்ற அங்கன்வாடி மையக் கட்டிடம் விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை</strong></p><p>​​​​​​​கள்ளக்குறிச்சி, ஜூன் 16- கல்வராயன்மலை ஒன்றியம், அத்திப்பாடி கிராமத்தில் அங்கன்வாடி மையப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அத்திப்பாடி, பனப்பாடி கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது ஒரு பழைய ஓட்டுக் கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்திற்குச் செல்கின்றனர். மழைக்காலங்களில் கட்டிடம் ஒழுகுவதால், பாதுகாப்பான புதிய கட்டிடம் கட்ட 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டன. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கட்டிடம் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மீண்டும் பழைய கட்டிடத்திலேயே பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.