கல்வராயன் மலையில் கனமழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
yesterday
<p><strong>கல்வராயன் மலையில் கனமழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 22- கல்வராயன் மலைப் பகுதியில் கடந்த சில நாட்க ளாகப் பெய்து வரும் கன மழையின் காரணமாக, பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை யினால், மலை ஓடைக ளில் நீர்வரத்து அதிகரித்து ள்ளது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டு கிறது. இந்த இயற்கைக் காட்சியைக் கண்டு ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் அப்பகுதி யில் குவிந்து வருகின்றனர். இருப்பினும், வெள்ளப்பெருக்கு மற்றும் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும், அருகில் செல்வதற்கும் வனத் துறையினர் தடை விதித்து ள்ளனர். மேலும், அப்பகுதி யில் காவல்துறையினரும் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையினால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு ள்ளதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர்.</p>
