முந்தய பக்கம்

கல்பாக்கம் வேக ஈனுலை இயங்கத்தொடங்கியது

9 Apr 2026, 5:30 am
கல்பாக்கம் வேக ஈனுலை இயங்கத்தொடங்கியது

கல்பாக்கம் வேக ஈனுலை இயங்கத்தொடங்கியது

சென்னை, ஏப். 8- கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ‘புரோட்டோடைப் வேக ஈனுலை’ கடந்த ஏப்ரல் 6 அன்று இரவு வெற்றிகரமாகத் தனது முதற்கட்டச் செயல்பாட்டை எட்டியது. இந்தியாவின் அணுசக்தித் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா வகுத்த மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில், இது மிக முக்கியமான இரண்டாம் கட்ட மைல்கல்லாகும்.

இந்த உலை, தான் நுகரும் எரிபொருளை விட அதிக அளவிலான எரிபொருளை உற்பத்தி செய்யும் தனித்தன்மை கொண்டது. இந்தியாவின் குறைந்த யுரேனிய வளத்தைக் கொண்டு, கைவசம் உள்ள அதிகப்படியான தோரியம் வளத்தைப் பயன்படுத்தும் எதிர்காலத் திட்டத்திற்கு இது ஒரு பாலமாக அமையும்.

முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், திரவ சோடியம் குளிர்விப்பானைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சாதனை, இந்தியாவின் எரிசக்தி சுயசார்பை உறுதிப்படுத்துகிறது. இந்த வரலாற்று நிகழ்வை, அணுசக்தித் துறைச் செயலர் அஜித் குமார் மொஹந்தி உள்ளிட்ட விஞ்ஞானிகள் நேரில் கண்டு கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram