தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூணாறின் அழகை ரசிக்க கள்ளிமாலி காட்சி முனை

9 May 2026, 2:08 pm
மூணாறின் அழகை ரசிக்க கள்ளிமாலி காட்சி முனை

மூணாறின் அழகை ரசிக்க கள்ளிமாலி காட்சி முனை

நீரின் நீல வண்ணத்தையும் பசுமை போர்த்திய சூழலின் அழகையும், இதமான தென்றலின் உணர்வையும் அனுபவிப்பதற்கான ஓர் மையம் கள்ளிமாலி காட்சி முனை. மூணாறு அருகில் உள்ள ராஜாக்காட்டில் காண வேண்டிய ஒரு காட்சி கள்ளிமாலி காட்சி முனை. மலைகளுக்கு இடையே வளைந்தும் நெளிந்தும் காணப்படும் பொன்முடி நீர் எனப்படும் நீலக் கண்ணாடியின் அழகு, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது.

பசுமை போர்த்திய சிறுசிறு குன்றுகள், மூங்கில் காடுகள் நீரின் அமைதி ஆகியவை அழகுக்கு அழகு சேர்க்கின்றன. மாலையில் மலை உச்சிகளில் மறையும் பொன்னிறச் சூரிய அஸ்தமனமும் இங்கு வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும். பொன்முடி அணை சுற்றுலா படகு சவாரி அனுபவமும் இப்பகுதியின் ஈர்ப்பை அதிகரிக்கிறது. கிராமவாசிகள் அலைகளில் துடுப்பு போட்டுக்கொண்டு தண்ணீரில் மீன் பிடிப்பதும் அழகிய காட்சி.

தெற்கின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறின் மடியில்தான் இந்த அரிய அழகு அமைந்துள்ளது. மூணாறிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் பயணம் செய்தால், கள்ளிமாலியின் இந்த இயற்கை அழகை நேரடியாகக் காணலாம். இது ராஜாக்காடு நகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியை விரைவாக சென்றடையலாம்.

கள்ளிமாலி காட்சி முனையின் பெரும் சிறப்பு, சாலையோரத்தில் இருந்தே பொன்முடி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரந்த காட்சியைக் காணலாம். சாகச விரும்பிகள் கவனமாக இறங்கி, அணைக்கு அருகில் செல்லலாம். இது மலையேற்ற ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த மையமாகும்.

அமெரிக்கன் ஹில்

இங்கிருந்து காணப்படும் மற்றொரு சிறப்புக் காட்சி 'அமெரிக்கன் ஹில்' ஆகும். நீர்நிலையின் நடுவில் ஒரு தீவு போல உயர்ந்து நிற்கும் இந்தப் பகுதி, ஒரு காலத்தில் மிளகு சாகுபடிக்குப் புகழ்பெற்றிருந்தது. மிளகுக்கு அதிக மதிப்பு இருந்த காலத்தில் இதற்கு அமெரிக்கன் ஹில் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது செழிப்பின் சின்னமாகும். நீர்நிலையின் வழியே படகு செலுத்தி இந்த மலையை அடைய முடிவது, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது.

பொன்முடியின் இதமான காற்றும், பனிமூட்டமான காலநிலையும் கள்ளிமாலியின் ஈர்ப்பை இரட்டிப்பாக்குகின்றன. அருகிலுள்ள ஸ்ரீ நாராயணபுரம் நீர்வீழ்ச்சி, நடுக்காணி காட்சி முனை ஆகியவை இப்பகுதியை ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக மாற்றுகின்றன.

இருப்பினும், இதன் மேம்பாட்டுப் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் குறைவாகவே உள்ளன. சோதனைச் சாவடிகளோ சுற்றுலா காவல்துறையோ இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும். இடுக்கியின் சுற்றுலா வரைபடத்தில் கள்ளிமாலி காட்சி முனை ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்து வருகிறது. இது பொதுவாக மாவட்டத்தின் தோற்றத்தையும், குறிப்பாக ராஜாக்காட்டின் தோற்றத்தையும் மாற்றும் ஒரு அழகான இடமாகும்.

- தேசாபிமானியில் பேபிலால், தமிழில் சி.முருகேசன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.