தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவு மலைக்கு திரும்பினார் கள்ளழகர்; உற்சாக வரவேற்பு

5 May 2026, 10:29 pm
இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவு மலைக்கு திரும்பினார் கள்ளழகர்; உற்சாக வரவேற்பு

இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவு மலைக்கு திரும்பினார் கள்ளழகர்; உற்சாக வரவேற்பு

மதுரை, மே 5- உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திரு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து கள்ளழகர் செவ்வா யன்று அழகர்மலையில் உள்ள அழகர்கோவி லுக்கு திரும்பினார்.

அவரை பக்தர்கள் என்ற கோஷங்களுடன் உற்சாகமாக வரவேற்ற னர். திருமாலிருஞ்சோலை என போற்றப் படும் அழகர்கோவில், 108 திவ்ய தேசங்க ளில் ஒன்றாகும்.

இங்கு ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இந்தாண்டு விழா ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி மே 6ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சிகளாக ஜனவரி 23ஆம் தேதி ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம், ஏப்ரல் 17ஆம் தேதி கொட்டகை முகூர்த்தம் மற்றும் தலையலங்காரம் நடை பெற்றன.

தொடர்ந்து ஏப்ரல் 27ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் திருவிழா தொடங்கி யது.

ஏப்ரல் 29ஆம் தேதி கள்ளழகர் மது ரைக்குப் புறப்பட்டு, 30ஆம் தேதி பக்தர் களின் எதிர்சேர்வை பெற்றார்.

மே 1ஆம் தேதி அதிகாலையில் ஆயிரம் பொன் சப்பர விழா வும், பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்வும் நடைபெற்றது.

மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மண்டூக முனி வருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

தொடர்ந்து மோகினி அவதாரம் மற்றும் தசாவதார காட்சிகள் நடைபெற்றன.

மே 4ஆம் தேதி கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாயன்று (மே 5) அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்திலி ருந்து கள்ளந்திரி வழியாக வந்த கள்ள ழகர், அழகர்கோவில் கோட்டைவாசலை அடைந்தார்.

பின்னர் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழி யாகி, திருக்கல்யாண மண்டபம் அருகில் பக்தர்கள் மலர்தூவி வரவேற்றனர்.

தொடர்ந்து கள்ளழகர் பரிவாரங்களுடன் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். பு

தனன்று (மே 6) காலை உற்சவ சாந்தி யுடன் சித்திரைத் திருவிழா நிறைவடை கிறது.

விழா ஏற்பாடுகளை துணை ஆணை யர்/செயல் அலுவலர் ஹரிஹரன் தலைமை யில் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.