கள்ளங்காடு வனப்பகுதியில் தொடரும் மான்கள் உயிரிழப்பு வன உயிரினங்களின் வாழ்விடத்தை பாதுகாக்க கோரிக்கை
10 Aug 2026, 12:14 am

கள்ளங்காடு வனப்பகுதியில் தொடரும் மான்கள் உயிரிழப்பு வன உயிரினங்களின் வாழ்விடத்தை பாதுகாக்க கோரிக்கை

மதுரை, ஆக.9-மதுரை மாவட்டம் மேலூர் வட் டத்தில் பூதமங்கலம், கொடுக்கம் பட்டி, வஞ்சிநகரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய கள்ளங்காடு வனப்பகுதியில் மான் கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தொடர்ந்துஉயிரிழந்து வருவது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.கள்ளங்காடு பகுதியில் மான் கள், தேவாங்கு, உடும்பு, மயில், கீரி, காட்டுப்பூனை உள்ளிட்ட பல் வேறு வனஉயிரினங்கள் மற்றும் ஏராளமான பறவைகள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவற் றின் நடமாட்டத்தை அப்பகுதி இளைஞர்கள் காணொளியாக பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

நீர், உணவு தட்டுப்பாடு

கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கள்ளங்காடு பகுதியில் தண்ணீர், உணவு தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மான் கள் கம்பாளிப்பட்டி, உசிலம்பட்டி, நாகப்பன்சிவல்பட்டி உள்ளிட்டகிராமங்களுக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக் கள் தெரிவிக்கின்றனர்.இதனால் சாலைகளில் வாகனங்கள் மோதுவது, தெருநாய்கள் தாக்குவது உள்ளிட்ட ஆபத்துகளுக்கு மான்கள் உள்ளாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கருங்காலக்குடி நான்கு வழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் ஒன்று உயிரிழந்தது.இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகப்பன்சிவல்பட்டி கிராமத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த மான் ஒன்றை தெருநாய்கள் தாக்கியதில் அது உயிரிழந்தது. இதனால் கள்ளங்காடு வனப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

எச்சரிக்கை பலகை அவசியம்

கள்ளங்காடு பகுதியில் மான் கள் அதிகம் நடமாடும் பகுதிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், சாலைவிபத்துகளைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும். வன உயிரினங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு வளங்கள் கிடைப்பதை உறுதி செய் யவும், தெருநாய்களின் தாக்குதலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திடுக!

மேலும், சிப்காட் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களால் கள்ளங் காடு வன உயிரினங்களின் வாழ்விடத்திற்கு ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும். கள்ளங் காட்டின் உயிரியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நீண்டகால பாதுகாப்புத்திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என 18 கிராமங்க

ளைச் சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.