தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்லல் பேருந்து நிலையம் அமைக்க கோரி கடையடைப்பு அனைத்துக் கட்சியினர் கண்டனக் கூட்டம்

7 Oct 2026, 8:58 pm
கல்லல் பேருந்து நிலையம் அமைக்க கோரி கடையடைப்பு  அனைத்துக் கட்சியினர் கண்டனக் கூட்டம்

கல்லல் பேருந்து நிலையம் அமைக்க கோரி கடையடைப்பு அனைத்துக் கட்சியினர் கண்டனக் கூட்டம்

சிவகங்கை, அக்.7-சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் நீண்டகாலமாக பேருந்து நிலையம் அமைக்கப்படாததைக் கண்டித்தும், இடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டனக் கூட்டம் புதனன்று நடைபெற்றது.

கல்லல் பேருந்து நிலையத்துக்கான இடம் புதிய சர்வே எண் 547/1-ல் அரசு பேருந்து நிலையம் என எஸ்.எல்.ஆர். நகல், ஏ-ரெஜிஸ்டர் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இடம் தொடர்பாக தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அக்.1 ஆம் தேதி நண் பகல் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டதாகவும், இதனால் கடும் வெயில், மழையில் பெண்கள், பள்ளி மாணவர்கள் உள் ளிட்ட பயணிகள் ஒதுங்கக்கூட இடமின்றி அவதிப்படுவதாகவும்அனைத்துக் கட்சியினர் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும், அதை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டனக் கூட்டத் திற்கு முன்னாள் கல்லல் ஊராட்சித் தலைவர் சுப.வடிவேல் தலைமை வகித்தார்.சிபிஐ மாவட்டச் செயலாளர் நா.சாத் தையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ஆறுமுகம், திமுக ஒன்றியச் செயலாளர் நா.நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கே.ஆர்.அசோகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.