கள்ளக்குறிச்சி வாரச் சந்தையில் ரூ.1.17 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
24 May 2026, 2:14 am
<p><strong>கள்ளக்குறிச்சி வாரச் சந்தையில் ரூ.1.17 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 23- கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடை பெற்ற வாராந்திர மஞ்சள் சந்தையில், ஒரே நாளில் 1.17 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இங்கு பிரதி வியாழக்கிழமையன்று மஞ்சள் சந்தை நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி நடைபெற்ற சந்தைக்குக் கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர், எறை யூர், சின்னசேலம் உட்படப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் அறு வடை செய்த 1,210 மூட்டை மஞ்சளை விற்பனைக்காகக் கொண்டு வந்தி ருந்தனர். இச்சந்தையில் விரலி ரக மஞ்சள் 795 மூட்டைகள் வரத்தாகி, அதிக பட்சமாக 17,555 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 14,099 ரூபாய்க்கும் ஏலம் போனது. அதேபோல், உருண்டை ரக மஞ்சள் 390 மூட்டைகள் வரத்தாகி, அதிகபட்சமாக 14,689 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 13,090 ரூபாய்க்கும், பனங்காளி ரக மஞ்சள் 25 மூட்டைகள் வரத்தாகி, அதிகபட்சமாக 32,102 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 27,002 ரூபாய்க்கும் விற்பனையானது. இச்சந்தையில் ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த வியா பாரிகள் திரளாக பங்கேற்று விலையை நிர்ணயம் செய்தனர். ஒரேநாளில் மொத்தம் ரூ.1.17கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகச் சங்கத்தின் செய லாட்சியர் தமிழ்ச்செல்வி தெரி வித்துள்ளார்.</p>
