முந்தய பக்கம்

வீரசோழபுரம் ஆட்சியர் அலுவலகம்: பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி

20 Jun 2026, 12:13 am
வீரசோழபுரம் ஆட்சியர் அலுவலகம்: பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி
<p><strong>வீரசோழபுரம் ஆட்சியர் அலுவலகம்: பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 19 கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகப் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வீரசோழபுரத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் செயல்படத் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் பெருமளவில் பேருந்துகள் மூலம் இங்கு வந்து செல்கின்றனர். போதிய நிழற்குடை வசதி இல்லாததால், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள் வெயில் மற்றும் மழைக் காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சாலையோரத்தில் நின்று பேருந்து ஏறும் சூழல் நிலவியது. பொதுமக்களின் இச்சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது இப்பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், விரைவில் அலுவலர்களும் பொதுமக்களும் எவ்விதச் சிரமமுமின்றிப் பேருந்துகளுக்காகக் காத்திருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram