உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு மரக்குச்சி ‘முட்டு’: வளையாம்பட்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சி!
8 Jun 2026, 11:20 pm
<p><strong>உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு மரக்குச்சி ‘முட்டு’: வளையாம்பட்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சி!</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 8- கள்ளக்குறிச்சி மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் உயர் மின்ன ழுத்த மின் கம்பிகளைத் தாங்கிப் பிடிக்க ஆபத் தான முறையில் மரக்குச்சி யால் ‘முட்டு’ கொடுக்கப்பட் டிருப்பது அப்பகுதி மக்களி டையே பெரும் அதிர்ச்சி யையும், அச்சத்தையும் ஏற் படுத்தியுள்ளது. வளையாம்பட்டு பகுதி யில் செல்லும் முக்கிய மின் கம்பம் ஒன்று முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதனைச் சரிசெய்து புதிய மின் கம்பம் நடுவதற்கு மின் வாரிய அதிகாரிகள் எந்த வித நடவடிகையும் எடுக்க வில்லை எனக் கூறப்படு கிறது. அதற்குப் பதிலாக, ஆபத்தை உணராமல் மின் கம்பிகளை ஒரு சாதாரண மரக்குச்சியை வைத்துத் தற்காலிகமாகத் தாங்கிப் பிடித்துள்ளனர். மிக உயர் மின்னழுத்தம் செல்லும் கம்பிகளுக்கு இத்தகைய அலட்சியமான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது எப்போது வேண்டுமானா லும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனப் பொது மக்கள் கவலை தெரிவித் துள்ளனர். தற்போது மழை மற்றும் காற்று வீசும் காலம் என்ப தால், பலத்த காற்றின் போதோ அல்லது மழையின் போதோ இந்த மரக்குச்சி நிலைதடு மாறி சரிந்து விழுந்தால், கடு மையான மின் விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் உண்டாக வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் பாது காப்பைக் கருத்தில் கொண்டு, மின்வாரியத் துறை உடனடியாகச் சேத மடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்றும், இதில் அலட்சிய மாகச் செயல்பட்ட மின்வா ரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வளை யாம்பட்டு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
