முந்தய பக்கம்

உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளின் வயல்களில் வேளாண் துணை இயக்குநர் ஆய்வு!

21 Jul 2026, 11:33 pm
உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளின் வயல்களில்  வேளாண் துணை இயக்குநர் ஆய்வு!
<p><strong>உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளின் வயல்களில் வேளாண் துணை இயக்குநர் ஆய்வு!</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 21- கள்ளக்குறிச்சி உழவர் சந்தைக்குக் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளின் வயல்களை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். துணை இயக்குநர் ரமேஷ் தலைமையில் சிறுவங்கூர் மற்றும் ரங்கநாதபுரம் கிராமங்களுக்குச் சென்ற அதிகாரிகள் குழுவினர், மல்லிகா, தனம், மாணிக்கம், ராமு, மண்ணாங்கட்டி, செல்வி உள்ளிட்ட 13 விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களைப் பார்வையிட்டனர். பயிர்களின் வளர்ச்சி, மகசூல் மற்றும் தரம் குறித்துக் கேட்டறிந்த அதிகாரிகள், நுகர்வோருக்குத் தரமான விளைபொருட்களை உழவர் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் தமிழ்வாணன், உதவி அலுவலர்கள் ஜெயபால், பாலு, சந்தை நிர்வாக அலுவலர் பழனிவேல் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram