முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி மஞ்சள் சந்தையில் ரூ. 78 லட்சத்துக்கு வர்த்தகம்

5 Jul 2026, 1:43 am
கள்ளக்குறிச்சி மஞ்சள் சந்தையில்  ரூ. 78 லட்சத்துக்கு வர்த்தகம்
<p><strong>கள்ளக்குறிச்சி மஞ்சள் சந்தையில் ரூ. 78 லட்சத்துக்கு வர்த்தகம்</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 3- கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர மஞ்சள் சந்தையில், ரூ. 78 லட்சத்திற்கான வர்த்த கம் நடைபெற்றது. இந்தச் சந்தையில் கள்ளக்குறிச்சி, சிறு வங்கூர், எறையூர், தண்டலை, சின்னசேலம், பாக்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 89 விவசாயிகள், மொத்தம் 784 மூட்டை மஞ்சளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். விரலி ரகம் (509 மூட்டைகள்): அதிகபட்ச விலை ரூ. 18,399, குறைந்தபட்ச விலை ரூ. 15,609. உருண்டை ரகம் (266 மூட்டைகள்): அதிகபட்ச விலை ரூ. 15,309, குறைந்த பட்ச விலை ரூ. 13,305. பனங்காளி ரகம் (9 மூட்டைகள்): அதிகபட்ச விலை ரூ. 32,209, குறைந்தபட்ச விலை ரூ. 25,009. ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் பங்கேற்று விலையை நிர்ணயம் செய்தனர். இத்தகவலை கள்ளக்குறிச்சி சி.எம்.எஸ். செயலாட்சியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram