முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 177 ‘தீக்கதிர்’ சந்தாக்கள் அளிப்பு

6 Jul 2026, 11:33 pm
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  177 ‘தீக்கதிர்’ சந்தாக்கள் அளிப்பு
<p><strong>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 177 ‘தீக்கதிர்’ சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 6– தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேகரிப்பு இயக்கம், ஜூலை 1 முதல் 15 வரை திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் சந்தா சேகரிப்பு இயக்கம், கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, கள் ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் 177 ‘தீக்கதிர்’ நாளிதழ் சந்தாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், முதற்கட்டமாக 100 சந்தாக்களுக்கான தொகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் அளிக்கப்பட்டது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ‘தீக்கதிர்’ வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தும் நோக் கில் நிர்ணயித்த இலக்கை விட கூடுதல் சந்தாக்களைப் பதிவு செய்ய தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், மீதமுள்ள 77 சந்தாக்களுக்கான தொகையும் விரைவில் வழங்கப்படும் என்றும் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய் சங்கர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram