தாயை தொடர்ந்து தந்தையும் சாவு அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த பள்ளி மாணவன் கை கொடுத்த கிராம மக்கள்
5 Oct 2026, 1:06 am

தாயை தொடர்ந்து தந்தையும் சாவு அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த பள்ளி மாணவன் கை கொடுத்த கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி, அக். 4-கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தில், தாயை இழந்த நிலையில், தந்தையும் நேற்று இறந்ததால் அடக்கம் செய்ய பணமில்லாமல் தவித்த சிறுவனுக்கு கிராம மக்கள் உறுதுணையாக இருந்து அனைத்து சடங்குகளையும் முன்னின்று நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி நடராஜ்-முனியம்மாள். இவர்களது மகன் மோகன்ராஜ் (15). இவர் பிளஸ் 1படித்து வருகிறார். இவரது தாய் முனியம்மாள் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்தநிலையில் தந்தை நடராஜனும் உடல்நலக்குறைவால் வெள்ளியன்று இறந்தார். ஏற்கெனவே தாயை இழந்ததுடன், திடீரென தந்தையும் இறந்ததால் சிறுவன் மோகன்ராஜ் என்னசெய்வதென்று தெரியாமல் பரிதவித்தான். இதையடுத்து கிராமமக்கள் ஒன்று கூடி அவரது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்து அடக்கம் செய்தனர்.90 வயதான பார்வையற்ற, காது கேளாத பாட்டியுடன் வசித்து வரும்மாணவருக்கு வருமானத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் அவரதுகல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகள் கேள்விக்குறியாகியுள்ளன.

எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர் மோகன்ராஜின் கல்வி தொடரவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உதவிவழங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.