பட்டியலின மக்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு தீஒமு, சிபிஎம் வாழ்த்து
8 Oct 2026, 1:35 am

பட்டியலின மக்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு தீஒமு, சிபிஎம் வாழ்த்து

பட்டியலின மக்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, அக்.7-குரால் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் சார்பில் வாழ்த்து தெரி விக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், குரால் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் மூன்றாவது சனிக்கிழமையன்று பட்டியலின மக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ள னர். அப்போது ஆதிக்க மனப் பான்மையுடன் செயல்பட்ட மற்றொரு தரப்பினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி, கோயிலை பூட்டி வழிபாட்டை தடுத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் இ. ஷஹ்னாஸ்

தாமதிக்காமல் நேரடியாக களத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மற்றொரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நிலையிலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம், வழி பாட்டு உரிமையை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என உறுதியாக தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்தவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தார். பின்னர் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் வகை யில் கோயிலைத் திறந்துவிட்டு அவர்களை வழிபடச் செய்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையில் உறுதியாக நின்று, தீண்டாமை கொடுமைக்கு எதிராக நீதியைப் பெற்றுத் தந்த மாவட்ட கண்காணிப்பாளரின் துணிச்சலான நடவடிக்கைக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும், ஜனநாயக அமைப்புகளிடமிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

வழிபாடு செய்தபின் மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். எதிர்ப்பு தெரிவித்த 16 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட தீண்டாமை ஒழிப்பு கோரிக்கை சாசன புத்தகம் அவரிடம் வழங்கப்பட்டது.

அதேபோல, கள்ளக்குறிச்சி வட்டம், நிறைமதி கிராமத்தில் அருந்ததியர் குடும்பத்தை கடுமை யாக தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோரிக்கை மனுவும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வே.ஏழுமலை, செயலாளர் டி.எஸ்.மோகன் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், அவரது மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.