தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி சமூக நீதி விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை! எம்.எல்.ஏ.-விடம் மாணவர்கள் புகார்

13 Jul 2026, 12:34 am
கள்ளக்குறிச்சி சமூக நீதி விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை!  எம்.எல்.ஏ.-விடம் மாணவர்கள் புகார்
<p><strong>கள்ளக்குறிச்சி சமூக நீதி விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை! எம்.எல்.ஏ.-விடம் மாணவர்கள் புகார்</strong></p><p>​​​​​​​கள்ளக்குறிச்சி, ஜூலை 12- கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் போதிய அடிப்படை வசதி கள் இல்லை என மாண வர்கள் கள்ளக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் அருள் விக்னேஷிடம் நேரில் புகார் அளித்தனர். விடுதியில் நிலவும் அவலநிலைகளை நேரில் கேட்டறிந்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், விடுதி யின் தற்போதைய சூழல் மற்றும் உணவு முறைகள் குறித்து வார்டனிடம் விசா ரணை நடத்தினார். ஆய்வின் போது மாணவர்கள் முன்வைத்த புகார்களில், விடுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால், குடிப்ப தற்கும் குளிப்பதற்கும் உப்பு நீரையே பயன் படுத்தும் அவலநிலை உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், போதிய மின் விளக்கு வசதி இல்லாதது, கொசுத்தொல்லையால் நோய் பரவும் அபாயம், பாது காப்பற்ற திறந்தவெளி கிணறு மற்றும் தண்ணீர் வசதியின்றிப் பூட்டிக் கிடக்கும் கழிவறை கட்ட டம் போன்ற பல்வேறு பிரச்ச னைகளைச் சுட்டிக்காட்டி னர். குறிப்பாக, விடுதி வளா கத்தில் உள்ள மைதானம் புதர் மண்டி கிடப்பதால் அதனைச் சீரமைத்துத் தர வேண்டும் என்றும் மாண வர்கள் கோரிக்கை விடுத்த னர். மாணவர்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.