தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மயானப் பாதை விவகாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

yesterday
மயானப் பாதை விவகாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு
<p><strong>மயானப் பாதை விவகாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 22 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், ராயப்பனூர் மதுரா செல்லி யம்பாளையம் கிராமத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த மயானப் பாதை விவகாரத்தில், அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. செல்லியம்பாளையம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் ஒரே மயானம் உள்ள நிலையில், அங்கு செல்வதற்கு ஒரே ஒரு பொதுத் தார்ச்சாலை மட்டுமே உள்ளது. இந்தத் தார்ச்சாலையில் ஆதி திராவிட மக்கள் சடலங்களை எடுத்துச் செல்லும்போது, ஒரு தரப்பினர் தொடர்ந்து இடையூறு செய்து வந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 17-ஆம் தேதி கலியன் (எ) கருப்பன் என்பவர் உயிரிழந்தபோது, அவரது உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்லச் சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்தனர். இதனால் ஆதிதிராவிட மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இது குறித்து காவல் துறைக்கும், வருவாய்த் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாத நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பேரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், “அரசு பொதுத் தார்ச்சாலை வழியாக இருதரப்பினரும் சடலத்தை எவ்விதத் தடையுமின்றி எடுத்துச் செல்லலாம்” என உறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. இக்கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் டி.எஸ். மோகன், சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் கே. பாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. சுப்பிரமணியன், சின்னசேலம் வட்ட செயலாளர் டி. மாரிமுத்து, வட்டக்குழு உறுப்பினர் பழனி மற்றும் கிராம பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.