தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியலின மாணவிகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்வதா? தலைமை ஆசிரியருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

23 Sept 2026, 1:30 am
பட்டியலின மாணவிகளை வைத்து  கழிவறையை சுத்தம் செய்வதா? தலைமை ஆசிரியருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

பட்டியலின மாணவிகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்வதா? தலைமை ஆசிரியருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

உளுந்தூர்பேட்டை, செப்.21-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், மா.குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பட்டியல் இன மாணவிகளை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும்படி தலைமை ஆசிரியர் திருமதி செல்வராணி கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மறுத்த மாணவிகளை அச்சுறுத்தி, மனரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குழந்தைகள் உரிமை மீறல் மட்டு மல்ல, பட்டியல் சாதியினர் மீதான வெளிப்படையான வன்கொடுமை என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை வைத்து கழி வறை சுத்தம் செய்யும் நடைமுறையை முற்றிலும் தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.