முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆய்வு

24 May 2026, 2:22 am
கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆய்வு
<p><strong>கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆய்வு</strong> </p><p>கள்ளக்குறிச்சி, மே 23- புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். நீமங்கலம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மொத்தம் 320 பள்ளிப் பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் அவசரக்கால வழி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருந்த 20 பேருந்துகள் இயக்க தகுதியின்றி நிறுத்தி வைக்கப் பட்டன. இக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே இவை இயக்க அனுமதிக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டது. தொடர்ந்து, ஓட்டுநர்கள் மற்றும் பெண் காப்பாளர்களுக்குச் சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram