தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் நான்கு வழிச்சாலை மாமந்தூர் கூட்ரோட்டில் மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

14 Jul 2026, 1:19 am
கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் நான்கு வழிச்சாலை மாமந்தூர் கூட்ரோட்டில் மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
<p><strong>கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் நான்கு வழிச்சாலை மாமந்தூர் கூட்ரோட்டில் மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 13- கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள மாமந்தூர் கூட்ரோடு பகுதியில் வாகனப் போக்கு வரத்து மற்றும் பொது மக்கள் நடமாட்டம் அதிக மாக இருப்பதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டி களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரைத் திருவண்ணாமலையுடன் இணைக்கும் முக்கியச் சாலையாகச் சங்கரா புரம் மற்றும் மூங்கில் துறைப்பட்டு வழித்தடம் உள்ளது. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், கரும்பு லாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. திரு வண்ணாமலை கிரிவல நாட்களின்போது இச்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது வழக்க மாக உள்ளது. மருத்துவமனை செல்லும் பயணிகளின் அவதி கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள மாமந்தூர் பேருந்து நிறுத்தப் பகுதி யில் மக்கள் சாலையைக் கடந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், இப்பகுதியில் நாள்தோறும் விபத்து அபாயம் நிலவுகிறது. முன்பு இருவழிச்சாலை யாக இருந்தபோது விபத்துகள் அதிகம் நடந்த நிலையில், தற்போது ரூ.176 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ மனைக்குச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, பெரும் விபத்துகள் ஏற்படும் முன்பாக, மாமந்தூர் கூட்ரோடு பகுதியில் நெடுஞ் சாலைத்துறை உரிய ஆய்வு மேற்கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.