குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அரசு பேருந்து சிறைபிடிப்பு
23 Sept 2026, 1:29 am

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அரசு பேருந்து சிறைபிடிப்பு

சங்கராபுரம், செப்.22-கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வட செட்டியந்தல் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.