சடையம்பட்டு அரசு கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லை: 1,500 மாணவர்கள் அவதி
3 Jul 2026, 11:25 pm

சடையம்பட்டு அரசு கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லை: 1,500 மாணவர்கள் அவதி

கள்ளக்குறிச்சி, ஜூலை 3- கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லாத தால், அங்கு பயிலும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மாணவர்கள் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தற்போது சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ், ஆங்கிலம், பி.காம், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இளங்கலை பாடப்பிரிவுகளும், முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளன. சங்கராபுரம், சின்னசேலம், தியாக துருகம், ரிஷிவந்தியம், கச்சிராய பாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு பயின்று வரு கின்றனர்.

கல்லூரிக்கு முறையான பேருந்து வசதி இல்லாததால், காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இது போதுமானதாக இல்லை. கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் செல்லும் பேருந்தில் வரும் மாணவர்கள், காரனூர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தூரம் ஏரி மற்றும் வயல்வெளிகளுக்கு இடையேயான சாலை வழியாக நடந்து செல்கின்றனர்.

அதேபோல், சங்கராபுரம் மார்க்கத்தில் வருபவர்கள் ரோடு மாந்தூர் நிறுத்தத்தில் இறங்கி, மோ.வன்னஞ்சூர் மற்றும் மோகூர் வழியாகச் சோமண்டார்குடி கோமுகி ஆற்றைக் கடந்து கல்லூரிக்குச் செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால், மாணவர்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

கோரிக்கை

தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலை யில், மாணவ, மாணவிகளும் பெற்றோரும் வேறு வழியின்றி கல்லூரிக்கு நடந்தே சென்று வரு கின்றனர். எனவே, கிராமப்புற மாண வர்களின் கல்வி நலன் கருதி, கல்லூரி நேரத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்கு வரத்துத் துறையும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.