முந்தய பக்கம்

ரிங் ரோடு திட்டம்: எம்.எல்.ஏ - ஆட்சியர் நேரில் ஆய்வு

12 Jun 2026, 10:41 pm
ரிங் ரோடு திட்டம்: எம்.எல்.ஏ - ஆட்சியர்  நேரில் ஆய்வு
<p><strong>ரிங் ரோடு திட்டம்: எம்.எல்.ஏ - ஆட்சியர் நேரில் ஆய்வு</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 12- கள்ளக்குறிச்சியில் புதிய வெளிவட்டச் சாலை (ரிங் ரோடு) அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் தொடக்கப் பணிகள் குறித்து, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மற்றும் ஆட்சியர் பத்மஜா ஆகியோர் ரோடு மாமந்தூர், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று நேரில் ஆய்வு செய்தனர். இச்சாலை வீரசோழபுரத்தில் தொடங்கி பெருவங்கூர், சிறுவங்கூர் மருத்துவக் கல்லூரி, காரனூர், தச்சூர் மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் வீரசோழபுரத்தை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இப்பணியில், முதற்கட்டமாக கச்சிராயபாளையம் முதல் வீரசோழபுரம் வரை 13.914 கி.மீ நீளத்திற்குச் சாலை அமைக்க 39.53 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram