ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8லட்சத்தில் வர்த்தகம்
15 Jul 2026, 1:27 am
<p><strong>ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8லட்சத்தில் வர்த்தகம்</strong></p><p>கள்ளக்குறிச்சி,ஜூலை 14 – கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் திற்கு விவசாயிகள் கொண்டு வந்த 167 மூட்டை விளைபொருட்கள், மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 950 ரூபாய்க்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. வரத்து விவரம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிரா மங்களைச் சேர்ந்த விவசாயி கள், தங்கள் விளைபொருட் களை விற்பனைக்காகக் கொண்டு வந்தனர். அதன் விவரம் வருமாறு: மக்காச்சோளம்: 100 மூட்டைகள்,எள்: 55 மூட்டைகள்,வேர்க்கடலை: 10 மூட்டைகள்,உளுந்து: 2 மூட்டைகள், மொத்தம்: 167 மூட்டைகள் விலை விவரம் (ஒரு மூட்டைக்கான சராசரி விலை): வர்த்தகர்கள் கலந்துகொண்ட ஏலத்தில், விளைபொருட்களின் சராசரி விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டது: மக்காச்சோளம்: ரூ. 2,200,எள்: ரூ.10,250, வேர்க்கடலை: ரூ. 9,900, உளுந்து: ரூ. 6,100 இதன் படி, நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ. 8,94,950-க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விற்பனைக் கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தங்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரி வித்தனர்.</p>
