சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ரேசன் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல்
27 Jun 2026, 12:22 am

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ரேசன் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல்

கள்ளக்குறிச்சி,ஜூன் 26- கள்ளக்குறிச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் குடோனில் இருந்து ரேஷன் கடை களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்படுகின்றன. இங்கு 16 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.

கூலி உயர்வு கோரிக்கை

வழக்கமாக, லாரி களில் 10 டன் வரை பொருட்களை ஏற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக 10 டன்னுக்கு மேல் பொருட்களை ஏற்றி அனுப்ப வேண்டுமென வலியுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கூடுதல் எடையுள்ள பொருட்களை ஏற்றும்போது, டன் ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனத் தெரிகிறது.

இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்க ளாக சுமை தூக்கும் தொழி லாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரண மாக, கடந்த இரண்டு நாட்க ளாக ரேஷன் கடை களுக்குப் பொருட்கள் ஏற்றி அனுப்பப்படாமல் குடோனி லேயே தேங்கியுள்ளன. இதனால், வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அதி காரிகள் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.