தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி நகரில் மேம்பாலம் சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அகாரிகள் புலத்தணிக்கை

3 Jul 2026, 11:23 pm
கள்ளக்குறிச்சி நகரில் மேம்பாலம்  சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அகாரிகள் புலத்தணிக்கை
<p><strong>கள்ளக்குறிச்சி நகரில் மேம்பாலம் சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அகாரிகள் புலத்தணிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 3- கள்ளக்குறிச்சி நகர எல்லையில் ரயில்வே இருப்புப் பாதையின் மீது மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியின் முதற்கட்டமாக, புலத்தணிக்கை நடை பெற்றது. தெற்கு ரயில்வே துறை அளித்த நிலக் கேட்பு திட்ட அட்டவணையின்படி, கள்ளக்குறிச்சி நகர எல்லை யில் ரயில்வே இருப்புப் பாதை மீது மேம்பாலம் மற்றும் அதற்கான சர்வீஸ் சாலை அமைக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பணிக் காகத் தேவைப்படும் நிலங் களைக் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டப் பணியாளர்கள், தெற்கு ரயில்வே நில எடுப்புத் தனி வட்டாட்சியர் கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி மண்டலத் துணை வட்டாட்சியர் தங்க வேல் ஆகியோர் தலைமை யிலான வருவாய் ஆய்வா ளர், கிராம நிர்வாக அலு வலர் மற்றும் பிற அலு வலகப் பணியாளர்கள் இன்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டனர். இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால், கள்ளக்குறிச்சி நகர ரயில்வே கேட் பகுதியில் நீண்டகாலமாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் எனப் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.