மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தக்கோரி எம்.எல்.ஏ.-விடம் மனு
11 Jun 2026, 11:38 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தக்கோரி எம்.எல்.ஏ.-விடம் மனு</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 11- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள்விக்னேஷை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஜூன் 10-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டக் குழுவின் சார்பில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போதைய விலை வாசி உயர்வுக்கு ஏற்ப, மாற்றுத்திறனாளி களின் மாதாந்திர உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே, நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்தக் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.-விடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம்.கே. பழனி, மாவட்டத் தலைவர் என். வைத்தியலிங்கம், மாவட்டச் செயலாளர் பி.வேலு, மாவட்ட பொருளாளர் எஸ். மீனாட்சி மற்றும் சங்கராபுரம் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இக்கோரிக்கையைச் சட்டமன்ற உறுப்பினர் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.</p>
