தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் செய்தி எதிரொலி ஆதரவற்ற பள்ளி மாணவருக்கு அமைச்சர், தவெக எம்எல்ஏ ஆறுதல்

8 Oct 2026, 1:36 am
தீக்கதிர் செய்தி எதிரொலி ஆதரவற்ற பள்ளி மாணவருக்கு அமைச்சர், தவெக எம்எல்ஏ ஆறுதல்

தீக்கதிர் செய்தி எதிரொலி ஆதரவற்ற பள்ளி மாணவருக்கு அமைச்சர், தவெக எம்எல்ஏ ஆறுதல்

கள்ளக்குறிச்சி, அக்.7-பெற்றோரை இ்ழந்து அனாதை யான பள்ளி மாணவனுக்கு அமைச்சர்,தவெக எம்எல்ஏ ஆறுதல் கூறினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி நடராஜ்-முனியம்மாள். இவர்களது மகன் மோகன்ராஜ் (15). இவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தாய் முனியம்மாள் உடல் நலக்குறைவால் ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்த நிலையில் தந்தை நடராஜனும் உடல்நலக்குறைவால் வெள்ளியன்று இறந்தார். ஏற்கெனவே தாயை இழந்ததுடன், திடீரென தந்தையும் இறந்ததால் சிறுவன் மோகன்ராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்தான். இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி அவரது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்து அடக்கம் செய்தனர். எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர் மோகன்ராஜின் கல்வி தொடரவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உதவி வழங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் விரிவாக வெளி யானது.

இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட சிறுவன் மோகன்ராஜ் மற்றும் அவனது உற வினர்களை நேரில் சந்தித்தனர்.

மோகன்ராஜ்க்கு ஆறுதல் கூறி ரூ.25,000 நிவாரணமாக வழங்கினர். மேலும் அவரது படிப்பு மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர்.

மேலும் அமைச்சர் ராஜ்மோகன் சிறுவன் மோகன்ராஜை தொடர்பு கொண்டு அரசு மூலம் கிடைக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.

காவல்துறையின் கனிவு

சிறுவன் மோகன்ராஜின் நிலையை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ஷஹ்னாஸ் அவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி செய்யும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் திருக்கோவிலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் எஸ்.குளத்தூர் கிராமத்திற்கு நேரில் சென்றனர். சிறுவன் மோகன்ராஜை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும் சிறுவனின் எதிர்கால நலனுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.