தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி புதியபேருந்து நிலையத்தில் தேங்கும் கழிவுநீர் பயணிகள் கடும் அவதி

18 Aug 2026, 11:19 pm
கள்ளக்குறிச்சி புதியபேருந்து நிலையத்தில் தேங்கும் கழிவுநீர்  பயணிகள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி புதியபேருந்து நிலையத்தில் தேங்கும் கழிவுநீர் பயணிகள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி, ஆக.18-கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் மற்றும் வியாபாரி கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் சில மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளி யூர்களுக்கு செல்லும் பயணி களின் வருகை அதிகமாக இருப்பதால் எப்போதும் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த பேருந்து நிலை யத்தை சுற்றி நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையான வடிகால் வசதி இல்லாததால் மதில் சுவரையொட்டி தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படு வதுடன், கொசுக்களின் உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே பேருந்து நிலைய பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.