முந்தய பக்கம்

கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி கண்டு கொள்ளாத காவல்துறை

9 hours before
கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி கண்டு கொள்ளாத காவல்துறை

கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி கண்டு கொள்ளாத காவல்துறை

கள்ளக்குறிச்சி, ஆக.24-கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலம் பகுதியில் தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், சேலம் - சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் நேரடியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக இந்த பாலத்தின் அடியில் நின்று பயணிகளை இறக்கி விட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.

எனவே, தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமாவது பாலத்தின் இருபுறமும் வலது மற்றும் இடதுபுறங்களில் போக்கு வரத்து காவலர்களை நியமித்து போக்கு வரத்து நெரிசலை சரி செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram