தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை!

24 May 2026, 2:30 am
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு   மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை!
<p><strong>10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை!</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 22- தமிழகத்தில் அண்மையில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவன் ஜீவானந்தம் தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 98 என மொத்தம் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். அதேபோல், மாணவன் சூர்யா மொத்தம் 477 மதிப்பெண்களும் (தமிழ்-94, ஆங்கிலம்-97, கணிதம்-98, அறிவியல்-96, சமூக அறிவியல்-92), மாணவன் சந்தோஷ் மொத்தம் 473 மதிப்பெண்களும் (தமிழ்-93, ஆங்கிலம்-98, கணிதம்-96, அறிவியல்-96, சமூக அறிவியல்-90) பெற்றுப் பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். மேலும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சாதனை படைத்த மாணவச் செல்வங்களை மவுண்ட் பார்க் கல்விக்குழுமங்களின் தாளாளர் மணிமாறன் நேரில் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கலைச்செல்வி, ஸ்பெஷல் அகாடமி முதல்வர் முத்துக்குமரன், துணை முதல்வர் வினோதினி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.