கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீதான பாலியல் புகார்: விசாரணை குழு அமைப்பு
2 hours before
<p>கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான பாலியல் புகாரை விசாரிக்க வனத்துறை செயலர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த எழுத்துப்பூர்வப் புகாரின் அடிப்படையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலியல் புகாரை விசாரிக்க வனத்துறை செயலர் காகர்லா உஷா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறைச் செயலாளர் பி. சுமதி மற்றும் சுனிதா ஜோ ஆகிய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணையை திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங்கும், விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாகப் பிரிவு ஐஜி காமினியும் நியமித்துப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
