தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் திடீர் ஆய்வு நகராட்சி அதிகாரி மீது பணியாளர்கள் புகார்!

24 May 2026, 2:24 am
கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில்  எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் திடீர் ஆய்வு நகராட்சி அதிகாரி மீது பணியாளர்கள் புகார்!
<p><strong>கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் திடீர் ஆய்வு நகராட்சி அதிகாரி மீது பணியாளர்கள் புகார்!</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 22- கள்ளக்குறிச்சி பழைய காய்கறி அங்காடி பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொது மக்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படு கின்றன, தினசரி எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் மற்றும் உணவுகளின் விலைப் பட்டியல் குறித்த விவரங்களை அவர் கேட்ட றிந்தார். தொடர்ந்து, அங்கி ருந்த சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றைப் சாப்பிட்டு அதன் தரத்தினைப் பரிசோதித்தார். பொது மக்களுக்கு உணவுகளை எப்போதும் தரமாகவும், சுவையாகவும் வழங்க வேண்டும் என்றும், உணவக வளாகத்தைத் தூய்மையாகப் பரா மரிக்க வேண்டும் என்றும் அங்கிருந்த ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, அங்கிருந்த பெண் பணி யாளர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தங்களது வேதனையையும் மனக் குமுறலையும் கண்ணீருடன் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “நகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது, என்ன உணவு வழங்கப்பட்டுள்ளது என்று கேட்டனர். அதற்கு நாங்கள் நகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படியே உணவு வழங்கியதாகக் கூறினோம். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஓர் அதிகாரி, ‘நகராட்சி ஆணை யர் சொன்னால் சாராயம் கூட விற்பீர்களா?’ என்று எங்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசினார். இங்கு பணிபுரியும் எங்களுக்குக் குறைந்தபட்ச மரியாதை கூட கிடைப்பதில்லை; இந்த அம்மா உணவகம் ‘அத்திப்பட்டி’ கிராமம் போல அதிகாரிகளால் முற்றிலும் ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது” என்று புகார் கூறினர். ஊழியர்களின் இந்த மனக்குமுறலைக் கேட்ட அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ, இது குறித்து நக ராட்சி ஆணையரிடம் நேரில் பேசி உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ், நகரச் செயலாளர் ராஜேஷ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.