முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையில் போலீஸ் உதவி மையம் அமைக்கக் கோரிக்கை

29 May 2026, 11:23 pm
கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையில் போலீஸ் உதவி மையம் அமைக்கக் கோரிக்கை
<p><strong>கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையில் போலீஸ் உதவி மையம் அமைக்கக் கோரிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி,மே 29- கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க அங்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு உதவி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இங்கிருந்த போலீஸ் உதவி மையம் சிறுவங்கூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதுகாப்புப் பற்றாக்குறையால் சமீபத்தில் செக்யூரிட்டி ஊழியருக்கும் நோயாளி உறவினருக்கும் ஏற்பட்ட மோதல் சாலை மறியல் மற்றும் கைது நடவடிக்கை வரை சென்றது. எனவே, மருத்துவமனையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகளைத் தடுக்க, நுழைவு வாயில் பகுதியில் மீண்டும் 24 மணி நேர சுழற்சி முறை போலீஸ் உதவி மையத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram