கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: கர்ப்பிணிகள் அவதி
13 May 2026, 11:46 pm
<p><strong>கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: கர்ப்பிணிகள் அவதி</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 13- கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை யால் கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் மாதாந்திரப் பரிசோதனை, அவசரப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகளுக்காக இம்மருத்துவ மனைக்கு வருகின்றனர். ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் போதிய மருத்துவர்கள் இல்லாத தால், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளில் பெரும் தாமதம் ஏற்படு வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தும், மிகக் குறைந்த எண்ணிக்கை யிலான மருத்துவர்களே பணியில் உள்ளனர். இது குறித்து கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும், மாவட்ட நிர்வாக மும் சுகாதாரத்துறையும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சில ஊழியர்கள் நோயாளி களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தை களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாகக் கூடுதல் மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ள னர். “மருத்துவர்கள் பற்றாக்குறையால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?” எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p>
