முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் ஜமாபந்தி முகாம்

12 Jun 2026, 10:42 pm
கள்ளக்குறிச்சியில் ஜமாபந்தி முகாம்
<p><strong>கள்ளக்குறிச்சியில் ஜமாபந்தி முகாம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 12-கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-வது பசலிக்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், வருவாய் வட்டாட்சியர் சேகர், சமூக நல தனி வட்டாட்சியர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>இம்முகாமில் வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், நலவாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கவேல், வட்ட துணை ஆய்வாளர் திலகர், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram