கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் தேக்கம்: நோயாளிகள் அவதி
11 Jul 2026, 10:37 pm
<p><strong>கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் தேக்கம்: நோயாளிகள் அவதி</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 11- கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவ மனைக்கு எதிரே உள்ள சமத்துவ புரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் அலுவலர் குடியிருப்புகளும் அருகிலேயே அமைந்துள்ளன. இப்படியிருக்க, மருத்துவ மனையில் இருந்து வெளி யேறும் கழிவுநீரை முறையாக அகற்றாமல், அருகில் உள்ள குட்டையில் தேங்க விட்டுள்ள னர். இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது நோய்த் தொற்று பரவும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரி விக்கின்றனர். தொடர்ந்து அதி கரித்து வரும் இந்த கழிவுநீர் தேக்க த்தை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சுகா தாரச் சீர்கேட்டைத் தடுக்கத் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடி யாக அகற்றி, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
