தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை

18 hours before
கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர்  சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை

கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை

கள்ளக்குறிச்சி, ஆக.23-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமையன்று (ஆக.22)கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவி கொடியேற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ரங்கசாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்முருகன் வரவேற்றார். மாநில துணைப்பொதுச் செயலாளர் முகமது உசேன்பேரவையை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட செயலாளர் ஆனந்த கிருஷ்ணன்வேலை அறிக்கை, பொருளாளர் சாமிதுரை வரவு செலவு அறிக்கை சமர்பித்தனர்.பேரவையில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் கள்ளக்குறிச்சி வட்ட தலைவர் சுந்தர்பாபு கவுரவிக்கப்பட்டார்.அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்பட பேரவையில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கமாவட்ட இணை செயலாளர் பெரியதமிழன்ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல்மாவட்டஇணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதியாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் கொளஞ்சிவேலு நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் தோழர் வீரபுத்திரன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.