அரசு பேருந்து விபத்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
29 Jun 2026, 12:09 am
<p><strong>அரசு பேருந்து விபத்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்</strong></p><p>கள்ளக்குறிச்சி,ஜூன் 28- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, மலைப் பாதையின் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி யது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதம டைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் உயிர்ச்சேதமின்றி உயிர் தப்பினர். சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. தகவலறிந்து விரைந்த கரியாலூர் போலீசார் மற்றும் தீய ணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேக் கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலை ப்பாதைகளில் வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், வேகக்கட்டுப்பாட்டுடனும் செயல்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p>
