தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி

28 May 2026, 11:24 pm
அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி
<p><strong>அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி </strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 28 – கள்ளக்குறிச்சி அருகே சடையம்பட்டு கோமுகி ஆற்றங்கரை யில், 2022-ஆம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போதிய அடிப்படை வசதி களின்றி மாணவர்கள் அவதியுறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இக்கல்லூரியில், 14 வகுப்பறை கள், 4 ஆய்வகங்கள், 6 கழிவறை கள், 6 ஆசிரியர்கள் ஓய்வு அறை கள், நூலகம், கருத்தரங்கு கூடம், முதல்வர் மற்றும் பேராசிரியர்க ளுக்கான அறைகள் ஆகிய வசதி கள் மட்டுமே உள்ளன. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராபாளையம், தியாகதுருகம், கல்வராயன்மலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் பயின்று வருகின்றனர். வகுப்பறைப் பற்றாக்குறை இளங்கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், வணிகவியல் என 7 பாடப்பிரிவுகளும், முதுகலைப் பிரிவில் ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், வணிகவியல் என 4 பாடப்பிரிவுகளும் உள்ளன. யுஜி பிரிவுக்கு 7 பாடப்பிரிவுகளுக்கு தலா 3 வகுப்பறைகள் வீதம் 21 வகுப்பறைகளும், பிஜி பிரிவுக்கு 4 பாடப்பிரிவுகளுக்கு தலா 2 வகுப்பறைகள் வீதம் 8 வகுப்பறைகளும் என மொத்தம் 29 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், இங்கு வெறும் 14 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதனால், ஒரே வகுப்பறையை தடுப்பு வைத்து இரண்டாகப் பிரித்து, இரண்டு வகுப்பு மாணவர்களை ஒன்றாக அமர வைத்து பாடம் நடத்தும் அவலநிலை நீடித்து வருகிறது. இடநெருக்கடியால் மாணவர்களால் கவனம் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது. பாதுகாப்பற்ற சூழல்: கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கல்லூரி வளாகத்திற்குள் சர்வசாதாரணமாக நுழைகின்றன. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், மாலை நேரங்களில் கல்லூரி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்களை ஒட்டி அமைந்துள்ள மாணவியர் விடுதிக்கும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால், அங்கு தங்கியுள்ள மாணவிகள் இரவு நேரங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி அச்சத்துடனேயே உறங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கல்லூரியில், வெறும் 6 கழிவறைகள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் நாள்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், கல்லூரி முழுவதற்கும் ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டுமே இருப்பதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோரிக்கை. எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்ட வேண்டும். கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியைச் சுற்றி உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உயர்கல்வி பயில வரும் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.