முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் வாகன நெரிசல்: பள்ளி மாணவிகள் அவதி

8 Jul 2026, 10:56 pm
கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில்  வாகன நெரிசல்: பள்ளி மாணவிகள் அவதி
<p><strong>கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் வாகன நெரிசல்: பள்ளி மாணவிகள் அவதி</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 8- கள்ளக்குறிச்சி நகரில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால், கச்சேரி சாலை, காந்தி ரோடு மற்றும் சேலம் சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதி களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, காந்தி ரோட்டில் சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, நடுவே தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டன. இருப்பி னும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சட்ட விரோதமாக நிறுத்தப்படு கின்றன. இதனால் கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவிகள் நெரிசலான சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, பள்ளிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க வும், நகரின் சாலைகளில் வாகனங்களை ஒழுங்கு படுத்தவும் போக்குவரத்து போலீஸார் தீவிர நட வடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram