தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளிநாட்டு வேலை மோசடி புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

5 Jun 2026, 3:19 am
வெளிநாட்டு வேலை மோசடி  புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
<p><strong>வெளிநாட்டு வேலை மோசடி புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 4- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றும் போலி ஏஜென்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் மீது மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரம், சங்கராபுரம், தியாகதுருகம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் படித்த மற்றும் படிக்காத பாமர மக்களைக் குறிவைத்து இந்த போலி புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் போன்றவற்றுக்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், முறையான அனுமதியோ, உரிமமோ இல்லாமல் செயல்படும் இவர்கள், போலியான ஆவணங்களைக் கொடுத்துவிட்டுத் தலைமறைவாகி விடுகின்றனர். உரிய ஆவணங்களைச் சரிபார்க்காமல் போலி புரோக்கர்களை நம்பி ஏமாறும் சம்பவங்கள் தொடர்வ தால், இது மாவட்டத்திற்கு ஒரு பெரும் பிரச்சனை யாக உருவெடுத்துள்ளது. எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உரிமம் இல்லாமல் செயல்படும் போலி புரோக்கர் களை அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.